தர்மபுரி மாவட்டத்தில் 18 செ.மீ மழை பதிவு

தர்மபுரி மாவட்டத்தில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பென்னாகரத்தில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தற்போது தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ளது பல்வேறு மாவட்டங்களில் தினந்தோறும் வெயில் 100 டிகிரி தாண்டி வெப்பம் நிலவி வருவதை அடுத்து பொதுமக்கள் வெப்பத்தால் தவித்து வருகின்றனர் மேலும் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது

இந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை பொழிந்துள்ளது. அதன்படி மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம், தர்மபுரியில் 20 மில்லிமீட்டர் மழையும், பாலக்கோட்டில் 17.4 மில்லி மீட்டர்மழையும், பென்னாகரம் 46, பாப்பிரெட்டிப்பட்டியில் 5 மில்லி மீட்டர்மழையும்,மொரப்பூர் 4 மில்லி மீட்டர் மழையும் என மாவட்டத்தில் பதிவான மொத்த மழையின் அளவு 118.8 மில்லிமீட்டர் மழையும்,மாவட்டத்தின் மொத்த சராசரி மழை அளவு 13.2 மில்லிமீட்டர் மழையும் பதிவு என ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Tags

Next Story