புதுச்சேரியில் இருந்து காரில் கடத்திய 180 மதுபாட்டில்கள் பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள், மதுபாட்டில்கள் கடத்தி செல்வதை தடுக்க பறக்கும் படையினர், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,
ஆரோவில் அடுத்த குயிலாப்பாளையம்-பொம்மையார்பாளையம் சந்திப்பில் புள்ளியியல் துறை ஆய்வாளர் நசீர்தீன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்த னர். அப்போது காருக்குள் 180 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப் பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக காரில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், திருவண்ணாமலையை சேர்ந்த மாரிமுத்து (வயது 27), அரிக்குமார் (47) என்பதும், உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களுடன் 2 பேரும் கோட்டக்குப்பம் மதுவி லக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 180 மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.