ரூ.18.38 லட்சம் புத்தகம் விற்பனை

X
கள்ளக்குறிச்சியில் கடந்த, 14,ம் தேதி முதல் புத்தகத் திருவிழா நடந்து வருகிறது.ஐந்தாம் நாளான நேற்று முன்தினம் 20,455 பேர் கலந்து கொண்டனர். மேலும், ரூ.2 லட்சத்து 78 ஆயிரத்து 465 மதிப்பில், புத்தகங்களை வாங்கிச் சென்றனர். பள்ளி மாணவர்களுக்கு அழகு கையெழுத்து போட்டி, கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் கவுசல்யாவின் 'அறம் காக்கும் ஆயுதம்' என்ற தலைப்பில் சிறப்புரை நடந்தது.தொடர்ந்து கருத்தரங்கம், கும்மி கோலாட்டம், அம்மன் காளி வேட நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த, 5 நாட்களில் மொத்தம் 1 லட்சத்து 36 ஆயிரத்து 303 பேர் கலந்து கொண்டனர். மேலும், ரூ.18 லட்சத்து 37 ஆயிரத்து 785 மதிப்பில் புத்தகங்களை வாங்கிச் சென்றனர். இந்த தகவலை கலெக்டர் பிரசாந்த் தெரிவித்தார்.
Next Story

