186 ஆவது உலக புகைப்பட தின நிகழ்வு
186 ஆவது உலக புகைப்பட தினம் இன்று திருச்செங்கோடு வட்டார மற்றும் போட்டோ கலைஞர்கள் நல சங்கம் சார்பில் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே நாமக்கல் மாவட்ட சங்கத்தின் பொருளாளர் பொன்னுசாமி, வட்டார தலைவர் ஹிதாயத்துல்லா தலைமையில் சங்க செயலாளர் ஜெயக்குமார், சங்க பொருளாளர் ஜோதி பாசு,துணைத் தலைவர் அன்பானந்தன் ஆகியோர் முன்னிலையில் கேமரா படம் இருந்த கேக்கை வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி தங்களது புகைப்பட தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பிறந்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு புத்தாடைகள் ரொட்டி பிஸ்கட் ஆகியவற்றை வழங்கினர் அரசு மருத்துவமனையில் திருச்செங்கோடு சங்க புகைப்பட கலைஞர்கள் ரத்ததானம் வழங்கினர் திருச்செங்கோடு ஏலிம் மன வளர்ச்சி குன்றியோர் இல்லத்திற்கு சுமார் 7000 மதிப்புள்ள மளிகை பொருட்களை சங்கத்தினர் வழங்கினர் இங்கு இல்ல குழந்தைகள் உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்தனர், இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் இந்நாள் நிர்வாகிகள்உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இணைச் செயலாளர் தேவேந்திரன் செயற்குழு உறுப்பினர்கள் ஜெகன் மற்றும் விஜயகுமார் நன்றி கூறினார்கள்
Next Story





