19-வது திவ்ய தேசமான சௌந்தரராஜ பெருமாள் கோயிலில்
நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயில், 108 திவ்யதேச கோயில்களில், 19-வது திவ்ய தேசமாக விளங்குகிறது. இக்கோயிலில், கும்பாபிஷேகம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 30- ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 6 கால பூஜை நிறைவு பெற்று, மகா பூர்ணாஹூதியும், அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடும், பின்னர் ராஜகோபுரம் மற்றும் மூலவர் கோபுர கலசம் ஆகியவற்றில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பரிவார தெய்வங்கள் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர், இரவு சௌந்தரராஜப் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. விழாவில், நாகை மட்டுமின்றி மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
Next Story








