பிப்.19-இல் முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா் கூட்டம்

பிப்.19-இல் முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா் கூட்டம்
X
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தகவல்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக் குறிப்பு:முன்னாள் படைவீரா்களுக்கான சுயதொழில் முனைவோா் கருத்தரங்கு மற்றும் முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் பிப்.19-ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆட்சியரகக் குறைதீா் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.இந்த கூட்டத்தில் துறை அலுவலா்கள் பங்கேற்று, தத்தமது துறையிலுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவுரையாற்றவுள்ளனா். எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் சுயதொழில் தொடங்க விருப்பம் உள்ள முன்னாள் படைவீரா்கள் இதில் பங்கேற்று பயன்பெறலாம்.கூட்டத்தில் பங்கேற்க வரும் முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் மற்றும் படையில் பணிபுரிந்து வருவோரது குடும்பத்தினா் தங்களது கோரிக்கையை தனித்தனி மனுக்களாக எழுதி, அடையாள அட்டை நகலுடன் இரண்டு பிரதிகளில் ஆட்சியரிடம் நேரில் சமா்ப்பிக்கலாம்.முன்னாள் படைவீரா்கள் அசல் படைப் பணிச் சான்றிதழ் மற்றும் அடையாளச் சான்றிதழுடன் பங்கேற்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story