19 வயது இளைஞருக்கு 42 ஆண்டுகள் கடும் காவல் சிறை தண்டனை

19 வயது இளைஞருக்கு 42 ஆண்டுகள் கடும் காவல் சிறை தண்டனை
X
15 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கி திருமணம் செய்து கொண்ட 19 வயது இளைஞருக்கு 42 ஆண்டுகள் கடும் காவல் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
15 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கி திருமணம் செய்து கொண்ட 19 வயது இளைஞருக்கு 42 ஆண்டுகள் கடும் காவல் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பீல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் அவரது மகன் அஜித் வயது 19 அதே ஊரை சேர்ந்த பெரம்பலூரில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயதான மாணவியை அஜித் காதலிப்பதாக கூறி 8 3 2022-ம் தேதி தனது பிறந்தநாள் விழாவிற்கு கேக் வெட்ட இரவு 07.30 மணிக்கு தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார் அங்கு சென்ற சிறுமியை அஜித் கல்யாணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து கட்டாயப்படுத்தி உடலுறவில் ஈடுபட்டுள்ளார் பின்னர் பலமுறை தனது வீட்டிற்கு சிறுமியை வரவழைத்து சிறுமியுடன் அஜித் உடலுறவில் ஈடுபட்டுள்ளார் அதன் காரணமாக கர்ப்பமுற்ற சிறுமியை பீல்வாடி கிராமத்தில் உள்ள பெரியசாமி கோயிலில் வைத்து 8 10 2022 ஆம் தேதி குழந்தை திருமணம் செய்துள்ளார். கர்ப்பமான சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அஜித் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் அங்கிருந்த மருத்துவர் சிறுமி திருமண வயதை அடையாத நிலையில் கர்ப்ப முற்றிருந்ததால் பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் குழந்தைகள் நல குழும உறுப்பினர் ராமு என்பவர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் கொடுத்து அதன் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் அஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர் வழக்கு விசாரணையின் போது சம்பவம் குறித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத குற்றத்திற்காகவும் உடந்தையாக இருந்த குற்றத்திற்காகவும் அஜித்தின் அம்மா லலிதா மற்றும் சிறுமியின பெற்றோரையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக போலீசார் சேர்த்தனர் இந்த வழக்கு பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது அரசு தரப்பில் அரசு குற்றவியல் சிறப்பு வழக்கறிஞர் திரு எம் சுந்தரராஜன் ஆஜரானார் வழக்கை விசாரித்த மகிளா நீதிபதி திருமதி இந்திராணி அஜித்தின் மீதான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பு வழங்கி போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறுமியுடன் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட குற்றத்திற்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூபாய் 50,000 அபராதமும் விதித்ததோடு அபராதம் கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தும், சிறுமியை கற்பமாக்கிய குற்றத்திற்காக போக்ஸோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூபாய் 50,000 அபராதம் விதித்தும் அபராதம் கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் கடும் காவல் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் படியான குழந்தை திருமணம் செய்து கொண்ட குற்றத்திற்காக 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூபாய் 50,000 அபராதமும் விதித்ததோடு அபராதம் கட்ட தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தும் மேற்கண்ட சிறை தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார். மற்ற எதிரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத தால் மற்ற எதிரிகளை வழக்கி லிருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கினார் தீர்ப்பினை அடுத்து அஜித் திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story