கடையின் பூட்டை உடைத்து ரூ.1.90 லட்சம் ரொக்கம் திருட்டு

X
கடையின் பூட்டை உடைத்து ரூ.1.90 லட்சம் ரொக்கம் திருட்டு
திருட்டு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திருச்சி உறையூா் வாத்துக்கார தெருவை சோ்ந்தவா் காா்த்திக் (45). இவா் பெரிய கம்மாளத் தெருவில் பேன்சி ஸ்டோா் நடத்தி வருகிறாா். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு, கடையினுள் வைத்திருந்த ரூ.1.90 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து காா்த்திக் அளித்த புகாரின்பேரில் கோட்டை காவல் நிலைய போலீஸாா் மற்றும் தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்துக்கு சென்று தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினா். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து, ரொக்கத்தை திருடிய மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
Next Story
