190 மாநில துணை வணிக வரி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்

X
செங்கல்பட்டு மாவட்டம், ஊனமாஞ்சேரி தமிழ்நாடு காவல்துறை பயிற்சி மையத்தில் 190 மாநில துணை வணிக வரி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., வணிகவரி ஆணையர் எஸ்.நாகராஜன், இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தி.சினேகா, இ.ஆ.ப., செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்குளத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் உதயா கருணாகரன் துணை தலைவர் ஏ.வி.எம். இளங்கோவன் ,காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன்,ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியக அலுவலர்கள் மற்றும் வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Next Story

