உரிய ஆவணங்கள் இல்லாததால் 1.93 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இல்லாததால் 1.93 லட்சம் பறிமுதல்

பேராவூரணியில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ. 1.93 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 

பேராவூரணியில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ. 1.93 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, பேராவூரணி சட்டமன்ற தொகுதி பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகளின்படி பறக்கும் படையினர் பட்டுக்கோட்டை சாலை, புதுக்கோட்டை சாலை, அறந்தாங்கி சாலை சேதுபாவாசத்திரம் சாலை ஆகிய பகுதிகளில் வாகனத் தணிக்கை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தென்னங்குடி உக்கடை பகுதியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவரால் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சத்து 93 ஆயிரத்து 410 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்த பணத்தை பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பூஷண குமார் முன்னிலையில், வட்டாட்சியர் தெய்வானையிடம் ஒப்படைத்தனர். அவற்றை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர். பறிமுதல் செய்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் கொண்டு சமர்ப்பிக்கப்பட்டு பணத்தினை பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story