ஈரோடு மாவட்டத்தில் 19,54,712 வாக்காளர்கள்

ஈரோடு மாவட்டத்தில்  19,54,712 வாக்காளர்கள்

வாக்காளர் பட்டியல் வெளியீடு 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் 19,54,712 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் 2024ஐ முன்னிட்டு, ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், ஈரோடு மாவட்ட இறுதிவாக்காளர் பட்டியல் 2024 ஐ வெளியிட்டார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 946965 பேரும் , பெண் வாக்காளர்கள் 1007577 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 170 என மொத்த 1954712 வாக்காளர்கள் உள்ளனர்.

Tags

Next Story