1990 கிரிக்கெட் அணியினர் சந்திப்பு
Komarapalayam King 24x7 |13 Jan 2025 2:22 PM GMT
குமாரபாளையத்தில் 1990ம் ஆண்டு கிரிக்கெட் அணியினர் சந்தித்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 1990ம் ஆண்டில் கிரிக்கெட் அணி ஆரம்பித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் விளையாடி வந்தனர். காலப்போக்கில் பெரும்பாலோர் பல ஊர்களுக்கு பணி நிமித்தமாக செல்லும் நிலை ஏற்பட்டது. இன்னும் சிலர் இந்த அணியை சேர்ந்தவர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். மாணவர்களுக்கு இலவச பயிற்சியும் கொடுத்து வருகிறார்கள். வழக்கமாக பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்தித்து உரையாடி வருவது வழக்கம். குமாரபாளையத்தில் முதன்முதலாக கிரிக்கெட் அணியினர் பல ஆண்டுகளுக்கு பின்னர் ஒன்று சேர்ந்து தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர். குமாரபாளையத்தில் கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டு பயிற்சிகளை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளனர். இது பற்றி முருகேசன் கூறியதாவது: 1990ல் தொடங்கிய எங்கள் கிரிக்கெட் அணியினர் பல மாநிலங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் எல்லோரும், முன்னாள் மாணவர்களை போல் ஒன்று சேர்ந்தால் என்ன? என்று முடிவு செய்து, இன்று நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். ஒவ்வொருவரும் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதன் பலனாக, நம் அனைவரின் சார்பில், மாணவர்கள், இளைஞர்களுக்கு அனைத்து விளையாட்டில் இலவச பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளோம். பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகள் வென்று நம் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story