ஆற்காடு எஸ்.எஸ்.எஸ்.கல்லூரியில் 19ஆவது ஆண்டு விழா
ஆண்டு விழாவில் கலந்து கொண்டவர்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு எஸ்.எஸ்.எஸ்.கல்லூரியில் விளையாட்டு விழா மற்றும் 19-வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரிகள் மற்றும் பள்ளி நிறுவனத்தலைவர் ஏ.கே.நடராஜன் தலைமை தாங்கினார். விளையாட்டுவிழாவை முன்னிட்டு ஒலிம்பிக் சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. க
ல்லூரி பொருளாளர் ஏ.என்.சரவணன், நிர்வாக அறங்காவலர் ஏ.என்.செல்வம், செயலாளர் ஏ.என்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த் துறை தலைவர் எஸ்.கவிதா வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜி.ராஜலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.செந்தில் வேல்முருகன் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
விழாவில் 100 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.மேலும்,ல் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.