ஏலகிரிமலை ஸ்ரீஸத்ய ஆஷ்ரமத்தில் 19 வது வருட ஸ்ரீஸத்ய குரு ஜெயந்தி விழா

ஏலகிரிமலை ஸ்ரீஸத்ய ஆஷ்ரமத்தில் 19 வது வருட ஸ்ரீஸத்ய குரு ஜெயந்தி விழா

விழாவில் கலந்து கொண்டவர்கள் 

ஏலகிரிமலை ஸ்ரீஸத்ய ஆஷ்ரமத்தில் 19 வது வருட ஸ்ரீஸத்ய குரு ஜெயந்தி விழா நடைபெற்றது.

ஏலகிரிமலை ஸ்ரீஸத்ய ஆஷ்ரமத்தில் வருட ந்தோறும் மே 15ந்தேதி அன்று உலக குரு மார்களின் புனித தினமாகவும் உலக குருமார்களை நினைவு கூறும் புனித நாளாகவும் கொண்டாடும் ஸ்ரீஸத்ய குரு ஜெயந்தி தரிசன த்திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த வருடமும் 15.05.2024 புதன்கிழமை அன்று சத்ய வழி பக்தர்களால் ஏலகிரிமலையில் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு பலவிதமான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சேது புண்ய ஸ்நான யாத்ரா அதன் துவக்கமாக முதல் நாள் ஏலகிரிமலையில் அருள் பாலித்து வரும் பிரபஞ்ச சக்தியான ஸ்ரீமஹாசக்தி ராமேஸ்வரம் சென்று புனித நீராடும் சேது புண்ய ஸ்னான யாத்ரா நிகழ்ச்சியில் பல மாநிலங்களில்,

இருந்தும் திரளான ஸத்ய பக்தர்கள் பேருந்துகளில் புனித யாத்திரை புறப்பட்டு சென்றனர். பால்குட பாதயாத்திரை ராமேஸ்வரத்தில் வெகு சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக பொன்னேரி கூட்டு ரோடில் இருந்து ஏலகிரி மலைக்கு நூற்று கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவே பால் குடம் சுமந்து நடந்து வரும் நிகழ்வும் நடந்தேறியது.

ஏலகிரி மலை வளைவுகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலங்கார வாகனங்களில் சாரிசாரியாக வந்த காட்சி காண கண்கொள்ளாகாட்சியாக இருந்தது. இந் நிகழ்வில் 108 தட்டுக்களில் குரு சீர் பக்தர்கள் தலையில் சுமந்து வந்து சமர்ப்பணம் செய்தார்கள்.

கூடவே அலங்கார வாகனத்தில் கேரள செண்டை மேள வாத்தியங்கள் முழங்க பொன்னேரியிலிருந்து ஆஷ்ரம் பக்தர்கள் சென்றனர். 27 பானை சத்ய ஜெயந்தி ஜெயப் பொங்கல் சிறப்பு சத்ய ஜெயந்தி பக்தர்கள் கைகளாலேயே 27 பொங்கல் பானைகளில் ஜெயப் பொங்கல் வைக்கும் நிகழ்வும் கேரள செண்ட மேளம் முழங்க நடந்தது.

பொங்கலின் நிறைவாக 27 பொங்கல் பானைகளில் இருந்தும் பொங்கல் எடுத்து ஶ்ரீமகாசக்தியானவருக்கு மொத்தமாக சமர்ப்பணம் செய்யப்பட்டது. பொங்கல் வைத்த அந்த பக்தர் வீட்டிற்கு பிரசாதமாகவும் வழங்கப்பட்டது. அவர்கள் வளமுடன் வாழவும் அவர்கள் குடும்பம் நலமுடன் வாழவும் செய்யும் என்பது இதன் சிறப்பம்சமாகும். உலக அமைதி,உலக நன்மைக்காக ருத்ர யாகம். உலக அமைதிக்காக,உலக நன்மைக்காக கும்பகோணத்தை சேர்ந்த சிவாச்சாரியார் சிவகுமார் தலைமையில் மாயவரம் நாதஸ்வர குழுவினருடன் மகா ருத்ர யாகம்,

மஹாருத்ர ஜெபம் இரு தினங்களாக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆசி பெற்றார்கள். அபய அன்னதானம் 9 வகையான பலவித உணவுகள் அடங்கிய சீடர் ஸ்ரீ அபய் நித்ய அன்னதானம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அனைவருக்கும் அதிவிமர்சையாக வழங்கப்பட்டது. ஆகாய ஐஷ்வர்ய தீபம் மாலையில் பக்தர்கள் தங்கள் கைகளால் ஆகாயத்தில் தீபம் ஏற்றி பறக்க விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் ஏற்றி பறக்க விட்ட தீபங்களால் வானமே தீபங்களால் நிறைந்து காணப்பட்டது. சாப விமோசன தரிசனம் இந்த நாளில் ஸ்ரீ மோக்ஷ விலாசில் ஸ்ரீஸ்ரீபரிபூரண மஹாசக்தி தரிசனம் செய்து கொண்டால் சாபவிமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

மிகுந்த பக்தியுடன் பக்தர்கள் கூட்டமாக தரிசனம் செய்து கொண்டனர். இதில் பல சிறப்பு விருந்தினர்களும், பல மாநிலங்களில் இருந்து ஸத்ய பக்தர்களும் திரளாக வருகை தந்து இந்த ஸ்ரீசத்ய ஜெயந்தி தரிசனத்திருவிழா வில் கலந்துகொண்டனர்.

இதற்கான விழா ஏற்பாடுகளை ஸ்ரீஸத்ய ஆஷ்ரம் சத்ய வழி பக்தர்கள் மற்றும் மகாசக்தி பக்த சபை நிர்வாகிகள் சீரும் சிறப்புமாக செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story