2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்
Dindigul King 24x7 |17 Sep 2024 2:06 PM GMT
எரியோடு கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட 2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டம் ஏரியோடு கடைவீதி, ஈ.பி ஆபீஸ், அய்யலூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வசந்தன், செல்வம், முருகன், ஜாபர் சாதிக் மற்றும் எரியோடு காவல் நிலைய போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ஆறு கடைகளில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை கைப்பற்றி அதில் 5 பேருக்கு ரூபாய் 1.50 லட்சம் அபராதம் விதித்தும், அதில் குணசேகரனின் மகன் முனியப்பன் மற்றும் முனியப்பனின் மனைவி அர்ச்சனா ஆகிய இரண்டு பேர் தனது வீட்டு மாடியில் பாத்திரத்தில் புகையிலைப் பொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து எரியோடு போலீசார் கைது செய்தனர். இன்று நடைபெற்ற சோதனையில் 200 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story