2 கோயில்களின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு
Dindigul King 24x7 |25 Dec 2024 1:31 PM GMT
எரியோடு அருகே அடுத்தடுத்து 2 கோயில்களின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு
திண்டுக்கல், எரியோடு, வடுகம்பாடி ஊராட்சி பண்ணைப்பட்டியில் காளியம்மன் மாரியம்மன் கோயிலில் இரவு நேரத்தில் புகுந்த கொள்ளையர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலை திருடி சென்றனர். இதேபோல் அதன் அருகாமையில் இருக்கும் மதுரை வீரன் கோயிலிலும் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் திருடப்பட்டுள்ளது. இன்று மதியம் கோவிலுக்குச் சென்ற பண்ணைப்பட்டி ஊர் மக்கள் கோவிலின் பூட்டு உடைந்து உண்டியல் திருடப்பட்டதை கண்டு அச்சமடைந்தனர். இதுகுறித்து எரியோடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் எரியோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோயிலின் பூட்டை உடைத்து உண்டியல் கொள்ளையடித்த மர்ம நபர்களை அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
Next Story