2 மணி நேரம் உரையாற்றிய ஐஏஎஸ் : ஆங்கிலம் புரியாமல் விழி பிதுங்கி நின்ற மாணவர்கள்

கல்லூரியில் 2 மணி நேரம் ஆங்கிலத்தில் உரையாற்றிய ஐஏஎஸ் அதிகாரி தூங்கிய மாணவர்கள், செல்போன் மற்றும் பேஸ்புக் சமூகவலைதளத்தில் நேரத்தை கடத்திய அதிகாரிகள், ஆங்கிலம் புரியாமல் விழி பிதுங்கி நின்ற மாணவர்கள், தண்ணீர் குடிக்க இடைவெளி இல்லாமல் தொடர்ந்து ஆங்கில உரை நொந்து கொண்ட கல்லூரி மாணவர்கள்
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியில் 2 மணி நேரம் ஆங்கிலத்தில் உரையாற்றிய ஐஏஎஸ் அதிகாரி தூங்கிய மாணவர்கள், செல்போன் மற்றும் பேஸ்புக் சமூகவலைதளத்தில் நேரத்தை கடத்திய அதிகாரிகள், ஆங்கிலம் புரியாமல் விழி பிதுங்கி நின்ற மாணவர்கள், தண்ணீர் குடிக்க இடைவெளி இல்லாமல் தொடர்ந்து ஆங்கில உரை நொந்து கொண்ட கல்லூரி மாணவர்கள் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரி இளநிலை பட்டம் மற்றும் முதுநிலை பட்டம் படிக்கும் மாணவர்கள் நான்காயிரம் பேர் உள்ளனர் இதில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோரை கல்லூரியில் உள்ள கலையரங்கத்தில் ஏசி போடப்பட்டு இந்த அரங்கத்தில் திருவள்ளூர் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது இந்நிகழ்விற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் வருவதாக இருந்தது அவர் வேறு அரசு நிகழ்ச்சிக்கு செல்வதால் அவருக்கு பதிலாக திருவள்ளூர் மாவட்ட பயிற்சி ஆட்சியர் ஆயுஷ் குப்தா ஐஏஎஸ் கலந்து கொண்டார் அவருக்கு கல்லூரி என்சிசி மாணவர்கள் பூரணம் மரியாதை அளித்து அழைத்து வந்தனர் நிகழ்ச்சிக்கு இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு உதவி இயக்குனர் விஜயா வரவேற்புரை ஆற்றினார் கல்லூரி முதல்வர் முனைவர் பூரண சந்திரன் முன்னிலை வகித்தார் இந்நிகழ்வில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறித்து அரசு வேலை வாய்ப்புகள் குறித்து தனியார் வேலை வாய்ப்புகள் குறித்து மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் குறித்தும் அரசு வேலைகள் செல்வது எப்படி படிப்பது எப்படி தயாராவது என்பது குறித்து விரிவாக ஆங்கிலத்தில் பயிற்சி ஆட்சியர் ஆயுஷ் குப்தா ஐஏஎஸ் ஆங்கிலத்தில் உரையாற்றினார் அப்போது மாணவர்களிடையே நீங்கள் கீழ்த்தட்டு மாணவர்களாக தற்போது படித்து மேல் மட்டத்திற்கு அரசு வேலை வாய்ப்புகளில் வருவது என்ன மாதிரி வேலைகளுக்கு நீங்கள் செல்ல போகிறீர்கள் உங்களுக்கு கம்ப்யூட்டர் அறிவு கம்ப்யூட்டர் பயிற்சி எப்படி வழங்கப்படுகிறது என்று ஆங்கிலத்தில் கேட்டார் அதற்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள் மாணவிகள் யாரும் அவரது கேள்விக்கு பதில் கூறுவதற்கு தயாராக இல்லை ஏனென்றால் அவர் ஆங்கிலத்தில் பேசிய வந்தார் தமிழில் படித்து வரும் இந்த மாணவர்களுக்கு அவரது கேள்விக்கு பதில் கூற தயங்கியபடி அமைதியாக இருந்தனர் அதில் கல்லூரியில் இருந்த பேராசிரியர்கள் அவர் கேட்ட கேள்வி இதுதான் என்று தமிழில் கூறியும் மாணவர்கள் ஆங்கிலத்தில் பதில் கூற தயக்கம் காட்டியதால் சர்ச்சையுடன் ஆங்கிலம் இவர்களுக்கு ஏன் புரியவில்லை என்று பேராசிரியர்களை பார்த்து பயிற்சி ஆட்சியர் பேராசிரியர்களிடம் கேள்வி எழுப்பினார் அதற்கு பேராசிரியர்கள் அமைதி காத்தனர் தொடர்ந்து அவர் மத்திய அரசின் வேலை வாய்ப்புகள் குறித்தும் மாநில அரசின் வேலைவாய்ப்புகள் குறித்தும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு செய்ய வேண்டிய அடிப்படை அறிவுகள் புத்தகங்கள் எப்படி படிக்க வேண்டும் எப்படி தேர்வு எழுத வேண்டும் என்று தொடர்ந்து அவர் ஆங்கிலத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பேசினார் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது பேராசிரியர்கள் பல பேர் செல்போன் பேசிக் கொண்டும் மற்றும் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அதிகாரிகளும் சமூக வலைத்தளத்தில் முழுகியவாறு இருந்தனர் சில அதிகாரிகள் ஏசி அறைகள் இருந்ததால் தூக்க களத்தில் மாறிப் போயினர் ஆனால் இதில் சில அதிகாரிகள் பேஸ்புக் சமூக வளத்தலத்தில் மிகவும் சுவாரசியமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் ஒரு பயிற்சியாளர் மாணவர்களுக்கு உரையாடும் பொழுது அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்களின் இந்த நிலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாணவர்களும் செல்போனில் முழுகிய வாரும் சில மாணவர்கள் தூங்கிக் கொண்டும் இருந்தனர் மொத்தத்தில் மாணவர்கள் இந்த கருத்தரங்கத்தை அலட்சியம் செய்தனர் ஆங்கிலம் புரியாததால் அவர்களுக்கு இது தேவையில்லாத கருத்தரங்கம் போன்று மாறியது ஆனால் விடாமல் இரண்டு மணி நேரம் வகுப்பு எடுத்த கருத்துறை வழங்கிய பயிற்சி ஆட்சியர் இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்களும் மற்றும் கல்லூரி முதல்வரும் செல்போனில் முழுகிய காட்சிகள் மாவட்ட பயிற்சி ஆட்சியர் ஐஏஎஸ் குப்தா ஆற்றிய உரை இவர்களும் அதை காதில் வாங்கவில்லை என்பது கீழே அமர்ந்திருந்த மாணவர்களுக்கு உறுதி செய்த நிலையாக மாறியது அதனால்தான் மாணவர்களும் தங்கள் இஷ்டம்போல் இந்த கருத்தரங்கத்தில் நடந்து கொண்டனர் மாணவர்களுக்கு இரண்டு மணி நேரத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களும் அவதி அடைந்தனர் மேலும் மாணவர்களுக்கு தண்ணீர் இடைவேளையும் சிற்றுண்டி டி பிஸ்கட் எதுவும் வழங்கவில்லை இதனால் மாணவர்கள் சோர்வடைந்தனர் மேலும் சில மாணவர்கள் இயற்கை உபாதை கழிக்க வெளியில் கூட செல்ல முடியாமல் அடக்கிக் கொண்டு அமர்ந்தனர் இப்படி எதிரில் இருக்கும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆங்கிலம் புரியுமா என்று கூட தெரியாமல் பயிற்சி ஆட்சியாளர் ஆங்கிலத்தில் நீண்ட உரையாற்றியது மாணவர்களுக்கு தலைசுற்றியது இந்த கல்லூரியில் நான்காயிரம் மாணவர்களுக்கு இரண்டு ஆங்கில ஆசிரியர்கள் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகையால் ஆங்கிலம் என்பதே பேசுவதற்கும் எழுதுவதற்கும் அதனை புரிந்து கொள்வதற்கும் இங்கு படித்து வரும் மாணவர்களுக்கு அது வேற்று மொழி போல் தான் இங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மொத்தத்தில் பயிற்சி கருத்தரங்கம் என்ற தலைப்பில் மாணவர்களை மற்றும் அதிகாரிகளை ஆங்கில உரையில் வேற்று கிரகத்திற்கு அனுப்பி தூங்க வைப்பதும் சமூக வலைதளத்தில் முழுக வைப்பதும் என்று நீண்ட உரையாற்றினார் பயிற்சி ஆட்சியர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story