2 கிலோமீட்டர் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

2 கிலோமீட்டர் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
X
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள நூத்தன் கண்மாய் கிராம மக்கள், 2 கிலோமீட்டர் சாலையை சீரமைக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள நூத்தன் கண்மாய் கிராம மக்கள், 2 கிலோமீட்டர் சாலையை சீரமைக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். நூத்தன் கண்மாயில் சுமார் 90க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். காளையார்கோவில், காளக்கண்மாய், நூத்தங்கண்மாய், ஒட்டாணம், மதுரைக் கண்மாய், ஆண்டிச் சூரனி வழியாக மதுரை சாலையில் இணைகிறது. காளக்கண்மாயில் இருந்து நூத்தங் கண்மாய் வரை 2 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை மிகவும் பழுதடைந்து மோசமாக உள்ளது. இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அவதி அடைகின்றனர். அவசர கால தேவைக்கு கூட சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்தச் சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story