2 பேர் கைது

X
ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமான மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கையை மேறகொண்டு வருகின்றனர். இதற்காக, போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு அன்னை சத்யா நகர் ஓடப்பள்ளம் பகுதியில், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு மது விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் அதேப்பகுதியைச் சேர்ந்த ராசாத்தி (55) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, சிவகிரி புதிய பஸ் ஸ்டாண்டில், சப்இன்ஸ்பெக்டர் ரகுநாதன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அங்கு மது விற்பனையில் ஈடுபட்டிருந்த மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்த சீனிவாசன் (58) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர் .
Next Story

