2ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தேனி வரும் நிலையில் சார்பு அணி மாவட்ட செயலாளர் பதவி விலகியதால் பரபரப்பு
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றம் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் தொகுதியில் வசித்து வரும் குறிஞ்சி மணி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிர்வாகியாக இருந்து வருகிறார். ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த குறிஞ்சி மணி விலகி அதிமுக எடப்பாடி தரப்பில் சேர்ந்து தேனி மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் மேற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்தார் இந்நிலையில் ஒன்றிணைந்த அதிமுக உருவானால் தான் அம்மா விட்டு சென்ற அத்தனை கனவுகளும் நினைவாகும் என்றும், கலகம் பிரிந்து கிடப்பதனால் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதாகவும், எனவே கழகத்திற்காக பாடுபட்ட நமது தலைவர்களான மாண்புமிகு புரட்சித்தாய் சின்னம்மா, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் என அனைவரையும் ஒன்று சேர்த்து ஒன்றுபட்ட அதிமுக உருவானால் மட்டுமே வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நமது கழகம் தனி பெரும்பான்மையுடன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்பதே அடிமட்ட தொண்டனாகிய எங்களுடைய விருப்பம் என்றார். ஒன்றுபட்ட அதிமுக உருவாக்க வேண்டும் என்று தான் வகித்து வந்த அதிமுக தேனி மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணியின் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியில் குறிஞ்சி மணி விலகிக் கொள்வதாக விலகல் கடிதத்தை அதிமுக தலைமைக்கு அனுப்பி வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார். வரும் இரண்டாம் தேதி தேனிக்கு ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தர உள்ள நிலையில் மாவட்ட சார்பு அணி செயலாளர் ஒருவர் பதவி விலகிய நிகழ்வு தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story



