2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

X
திருச்சி தென்னூர் அண்ணாநகர் புது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அமீது (வயது 27). இவர் மீது தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் அவர் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் வெளியில் வந்தால் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுவார் என்பதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமீதுவிடம் நேற்று வழங்கப்பட்டது. இதேபோல் காட்டூரை சேர்ந்த ராஜ துரை என்கிற மாஞ்சா வேலு (26) என்பவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதற் கான உத்தரவு நகல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாஞ்சா வேலுவிடம் நேற்று வழங்கப்பட்டது.
Next Story

