+2 மாணவி பலாத்காரம் வாலிபருக்கு  போக்சோ  

+2 மாணவி பலாத்காரம் வாலிபருக்கு  போக்சோ  
X
நாகர்கோவில்
நாகர்கோவில் அருகே பிள்ளை தோப்பு கிராமத்தை சேர்ந்த வாலிபர்  ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். இது குறித்த அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்திய போது சம்பந்தப்பட்ட வாலிபர் திருப்பதிசாரம்  பகுதியில் வாடகை வீட்டில் இருப்பது தெரியவந்தது.      போலீசார் அங்கு சென்றபோது அவரிடம் 17 வயது நிரம்பிய மாணவி ஒருவரும் இருந்தார். தொடர்  விசாரணையில் மாணவிக்கும் சம்பந்தப்பட்ட வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம்  மூலம் பழக்கம் ஏற்பட்டு காதல் ஏற்பட்டுள்ளது.       பின்னர் மாணவியின் பெற்றோருக்கு இந்த சம்பவம் தெரிய வந்ததும் முதலில் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் பின்னர் அந்த வாலிபரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக வாலிபருக்கு தனியாக வீடு எடுத்து கொடுத்து தங்க வைத்தனர். அந்த வாலிபரிடம் மாணவியை திருமணம் செய்ய விட்டால் காவல் நிலையத்தில் புகார் அளித்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.       இதற்கிடையில் தனிமையை பயன்படுத்தி மாணவியை வாலிபர் பராத்காரம் செய்ததாக  கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வாலிபர் மற்றும் மாணவியிடம் நடந்த விசாரணை அடிப்படையில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.        இதற்கு உடந்தையாக இறந்த மாணவியின் பெற்றோர் மற்றும் அவரது சித்தி ஆகியோரையும் கைது செய்தனர்.
Next Story