2 கடைகளில் பூட்டு உடைத்து திருட்டு

X
ஆலங்குடி: ஆலங்குடியை அடுத்த பனங்குளம் வடக்கு பாலம் பஸ் நிறுத்தம் அருகே ஏராளமான கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வியா பாரிகள் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற னர். நேற்று காலை கடைகளை திறக்க வந்தபோது, மருந்துக்கடை மற்றும் பெட்டிக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்ததும் கீரமங்கலம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில், மூவேந்தன் என்பவருக்கு சொந்தமான மருந்து கடையில் ரூ.22 ஆயிரத்து 600ம், குருசேவ் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் பிஸ்கட் பாக்கெட் உள் ளிட்ட பொருட்களையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றதுடன், கடைகளில் உடைக்கப்பட்ட பூட்டுகளையும் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
Next Story

