2 டன் ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்

X
. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலைநகர் அருகே கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர் அருள் பிரகாஷ் அறிவுறுத்தலின் படி கோட்டார் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கேரளா பதிவு எண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது காரில் கடத்தி வந்த 2 டன் ரேஷன் அரிசியை கோட்டார் போலீசார் பறிமுதல் செய்தனர். காரின் ஓட்டுனர் தப்பி ஓடினார். அரிசி மற்றும் காரை வட்ட வழங்கல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
Next Story

