2 கிலோ கஞ்சாவுடன் 4 வாலிபர்கள் கைது
Nagercoil King 24x7 |8 Jan 2025 2:08 PM GMT
குமரி
கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் .இரா.ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இந்நிலையில் நாகர்கோவில் அருகே இருளப்பபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருளப்பபுரம் மதுசூதனப் பெருமாள் பகுதியை சார்ந்த ராஜகுமார் என்பவரின் மகன் ஆனந்த(29) மற்றும் இருளப்பபுரம் மீனாட்சிநகர் பகுதியை சார்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் பிரவீன்குமார்(36) மற்றும் பீச் ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் மூர்த்தி (34) மற்றும் ராமபுரம் புதுக்கிராமம் காலணி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பது மகன் சரவணன் (21) என்பவர்களிடமிருந்து 2 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சா எனும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. பின்பு அவர்களை கோட்டார் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 2கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்காக பயன்படுத்திய இருச்சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
Next Story