புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
X
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்தனர்
திருப்பூர் தெற்கு போலீஸ் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பழைய பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த முருகன்(வயது 50), செல்வராஜ்(44) என்பதும், இவர்களிடம் 3 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தெற்கு போலீசார் 2 பேரையும் கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
Next Story