2 பூனைகள் உட்பட 58 நாய்களுக்கு தடுப்பூசி

2 பூனைகள் உட்பட 58 நாய்களுக்கு தடுப்பூசி
X
செல்ல பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாமில் சிகிச்சை
உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு, நாகை கால்நடை மருத்துவமனையில் நாய், பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளுக்கான வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர்.ஈஸ்வரன் தலைமை வகித்தார். உதவி இயக்குனர்கள் டாக்டர்கள் கணேசன், சங்கீதா, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பூசி போடுவதின் அவசியம் குறித்து விளக்கி பேசினர். முகாமில், நாகை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 2 பூனைகள் உள்பட 58 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. முகாமில். பராமரிப்பு உதவியாளர்கள் பழனிச்சாமி, புவனரோகிணி, தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story