தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

திருப்பூரில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

திருப்பூரில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் அதிகப்படியாக திருடப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர். பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பெயரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான கோல்டன் நகர் பகுதியில் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர்.ராஜேசேகர் தலைமையில் காவல்துறையினர் ஊத்துக்குளி சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி வாகனத்தை ஓட்டி வந்த இருவரையும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினரின் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதை தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் ஒருவரது பெயர் சூர்யா வயது 22 திருப்பூர் சிட்கோ பகுதியைச் சார்ந்தவர் என்பதும் மற்றொரு நபரின் பெயர் அறிவழகன் இவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் காவல்துறையினரின் தொடர் விசாரணையில் சூர்யா திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அறிவழகன் இடம் விற்பனை செய்தது தெரியவந்தது

அதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த வடக்கு குற்றப்பிரிவு காவல் துறையினர் அவர்களிடமிருந்து விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் தொடர் இருசக்கர வாகனத்தில் ஈடுபட்ட சூர்யா, அறிவழகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சூர்யா அறிவழகன் ஆகிய இருவர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story