வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது

வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது
X

கைது

கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமந்துாரை சேர்ந்த சுப்ரமணியன் மகன் பிரபாகரன், 21. இவர் பைக்கில் சிறுவங்கூர் சென்றார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த விக்னேஷ், பைக்கில் ஏன் அதிவேகமாக செல்கிறாய் என, பிரபாகரனிடம் கேட்டதால், தகராறு ஏற்பட்டது. இதனால், விக்னேஷ், 22, நீலமங்கலம் காந்தி நகரை சேர்ந்த அவரது நண்பர் மணி மகன் பிரசாந்த்,20, ஆகியோர் நேற்று பிரபாகரனை தாக்கி கத்தியால் குத்தினர். அக்கம் பக்கத்தினர் தடுத்து நிறுத்தி, இருவரையும் பிடிக்க முயன்றனர். பிரசாந்தை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். காலில் படு காயமடைந்த பிரபாகரன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து பிரசாந்த் மற்றும் தப்பியோடிய விக்னேஷையும் கைது செய்தனர்.

Tags

Next Story