ஆரணி அருகே மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஆரணி அருகே மணல் கடத்திய  2 மாட்டு வண்டிகள் பறிமுதல்


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மோட்டூர் பகுதியில் உள்ள செய்யாற்றுப் படுகையில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மோட்டூர் பகுதியில் உள்ள செய்யாற்றுப் படுகையில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மோட்டூர் பகுதியில் உள்ள செய்யாற்றுப் படுகையில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆரணி கிராமிய ஆய்வாளர் ராஜாங்கம் உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளர் ஷாபுதீன், சிறப்பு உதவி ஆய்வாளர் கன்ராயன் மற்றும் போலீசார் ஆரணியை அடுத்தமோட்டூர் பகுதி யில் உள்ள செய்யாற்று படுகையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது,அங்குள்ள ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோடினர். இதையடுத்து, போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து விசாரித்தனர். இதில், மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களான மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் பச்சையப்பன் (45), ஹரிகிருஷ்ணன் மகன் ஏழுமலை(45) ஆகியோர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

Tags

Next Story