கோட்டூரில் குளத்தில் தவறி விழுந்து 2 குழந்தைகள் பலி

கோட்டூரில் குளத்தில் தவறி விழுந்து 2 குழந்தைகள் பலி

கோப்பு படம் 

நாகை மாவட்டம் கோட்டூரில் குளத்தில் தவறி விழுந்து 2 குழந்தைகள் பலியானது.

நாகை மாவட்டம் கோட்டூரில் குளத்தில் தவறி விழுந்து 2 குழந்தைகள் பலி நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் ரபீக்,ரம்ஜான் பேகம் இவர்களின் மகன் ராசீத் (வயது 7). அதே பகுதியை சேர்ந்தவர் நவுசாத் அலி,நஜீலா பேகம் இவர்களின் மகன் முகம்மது நபீஷ் (வயது 6).ரம்ஜான் பேகம் மற்றும் நஜீலா பேகம் இருவரும் உடன்பிறந்த அக்கா தங்கை ஆவர்.

இருவருடைய கணவரும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் இரண்டு குழந்தைகளும் சைக்கிள் ஒட்டி விளையாடி உள்ளார்.அப்போது யாரும் இல்லாத நேரத்தில் அருகில் உள்ள அய்யனார் குளத்தில் இறங்கியதாக தெரிகிறது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் சைக்கிள் ஓட்டி விளையாடிய குழந்தைகளை காணவில்லை,

ஆனால் சைக்கிள் மட்டும் குளத்தின் கரையில் இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்து குளத்தில் இறங்கி தேடி உள்ளனர்.அப்போது நீரில் மூழ்கி மயக்கமான நிலையில் இரண்டு குழந்தைகளையும் மீட்டு நன்னிலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு குழந்தைகளை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தைகள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story