திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் 2 கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்ட பணிகள்

திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் 2 கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்ட பணிகள்
கள ஆய்வு
திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் 2 கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்ட பணிகளை பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 15- வது நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் புதிய குடிநீர் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி, ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கழிவறை பணி, ரூ.9 லட்சம் மதிப்பில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் உண்டு உறைவிட பள்ளி அரசு மாணவியர் விடுதிகளில் சுற்றுச்சுவர் மதில் சுவர் கட்டும் பணி, திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி சத்திரத் தெருவில் வறட்சி காலத்தில் மக்களின் குடி நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் ஆழ்துளை கிணறு பணி, ரூ.1 கோடியே 63 லட்சம் மதிப்பில் திருவெண்ணெய்நல்லூர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து அரசு கலைகல்லூரி வரை தடுப்பு கட்டையுடன் தார் சாலை மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், அனைத்து வளர்ச்சித்திட்ட பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

Tags

Next Story