ஊத்தங்கரை வாரச்சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம்

ஊத்தங்கரை வாரச்சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம்

வார சந்தையில் குவிந்த வியாபாரிகள்

ஊத்தங்கரை வாரச்சந்தையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு மாடு விற்பனை அமோகம் 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருந்து நிலையம் பின்பகுதியில் வாரம்தோறும் நடைபெறும் மாட்டுச் சந்தையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வழக்கத்திற்கு மாறாக அதிக மாடுகள் விற்பனை ₹2 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

வாரம் தோறும் வெள்ளிக்கிழமை தினங்களில் நடைபெறும் புகழ்பெற்ற மாட்டு சந்தையில் மாடுகளை வாங்க விற்க பல்வேறு மாநில மாவட்ட பகுதிகளில் இருந்து மாடுகளை வாங்க விற்க அதிகளவில் மக்கள் வருவது வழக்கம். குறிப்பாக கேரளா ஆந்திரா கர்நாடகா மற்றும் மாவட்டப் பகுதிகளாக உள்ள தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர்,ராணிப்பேட்டை,சேலம் உள்ளிட்ட பகுதியிலிருந்து அதிக அளவில் வியாபாரிகள் வந்து செல்லும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

புகழ்பெற்ற மாட்டுச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டும் எழுப்பி உள்ளனர். முறையாக கழிப்பறை வசதி குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாடுகளை வாகனங்களில் ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் சாய்வு தளம் அமைத்து தர வேண்டும்.

நுழைவு கட்டணம் அதிக அளவில் வசூல் செய்வதாகவும் வாகனம் ஒன்றிற்கு உள்ளே வரும் பொழுது 200 ரூபாயும் மீண்டும் வாகனம் வெளியே செல்லும் பொழுதும் 200 ரூபாய் செலுத்த வேண்டும் என கூறுவதால் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் வியாபாரிகள் உடனடியாக மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட குத்தகைதாரர்களை அழைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

மற்றும் சந்தைக்கு வரும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி களவு போவது தொடர் கதையாக உள்ள நிலையில் பாதுகாப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

Tags

Next Story