மாவட்டத்தில் இதுவரை பறக்கும்படை சோதனையில் ரூ.2¾ கோடி பறிமுதல்

மாவட்டத்தில் இதுவரை பறக்கும்படை சோதனையில் ரூ.2¾ கோடி பறிமுதல்

பறிமுதல்

மாவட்டத்தில் இதுவரை பறக்கும்படை சோதனையில் ரூ.2¾ கோடி பறிமுதல். தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை.
சேலம் மாவட்டத்தில் பறக்கும்படை சோதனையில் இதுவரை ரூ.2¾ கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ பார்வை குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள், உதவி செலவின மேற்பார்வை குழுக்கள் என பல்வேறு குழுக்கள் மாவட்டம் முழுவதும் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஓமலூர், மேச்சேரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டதை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படையினரின் வாகன சோதனையின் போது ரூ.2 கோடியே 73 லட்சத்து 79 ஆயிரத்து 151 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story