'உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்   கீழ்வேளூர் தாலுக்காவில் 2 நாள் கலெக்டர் ஆய்வு     

உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்   கீழ்வேளூர் தாலுக்காவில் 2 நாள் கலெக்டர் ஆய்வு     

 கலெக்டர் ஆய்வு     

உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்   கீழ்வேளூர்  தாலுக்காவில் 2 நாள் கலெக்டர் ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம் கடந்த மாதம் நாகை மாவட்டத்தில் திருக்குவளை தாலுக்காவில் தொடங்கியது. இந்த திட்டத்தின் படி நாகை மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ், கீழ்வேளூர் வட்டத்தில் நே ற்று காலை 9 மணி முதல் இன்று காலை 9 மணி வரை நாள் முழுவதும் ஆய்வு மேற்கொண்டார். நேற்று கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள நெகிழி மறுசுழற்சி மையத்தை மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்ட பின்னர் அங்கு பணி புரியும் தூய்மை பணியாளர்களிடம் பணிகள் குறித்து கேட்டரிந்து பிளாஸ்டிக் கழிவுகளை அதிகளவில் சேகரித்து தரவேண்டும் எனவும் கூறினார். தொடர்ந்து வேளாங்கண்ணியில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு இங்கு பால் கொண்டு வரும் பால் உற்பத்தியாளர்களுக்கு வங்கி கடன் வழங்க அலுவலருக்கு உத்தரவிட்டார்.அதன் பின் வேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் வங்கியில் கடன் பெற்ற மீனவர்கள் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழு பெண்களின் கடன் பற்றி விவரங்களின் கோப்பு குறித்து ஆய்வு செய்தார். பின்னர் வேளாங்கண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி பெண்கள் விவரங்கள் குறித்தும் அவர்கள் அனைவரும் குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவர்களை கேட்டுக் கொண்டார் அப்போது ஆட்சியரை காரை வழிமறைத்த இரண்டு பூம்பூம் மாட்டுக்கார பெண்கள் தங்களுக்கு வீடு வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர் இதையடுத்து அவர்கள் வசிக்கும் வேளாங்கண்ணி யில் ஆய்வு மேற்கொண்டார்.மேலும் அங்கு வசிக்கும் நான்கு பூம்பூம் மாட்டுக்கார பெண்களுக்கும் குடும்பத்தினருக்கும் பாப்பா கோயில் வீடுகள் வழங்குவதற்கான சாத்தியக்கூறு இருந்தால் நடவடிக்கை எடுக்க வட்டாச்சியரிடம் கூறினார். அதனைத் தொடர்ந்து வே ளாங்கண்ணி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார். பின்னர் அங்கு கட்டப்பட்டு வரும் நீர் தேக்க தொட்டியினை ஆய்வு செய்து கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். பின்னர் கீழ்வேளூர் ஒன்றியம் கீழ்வேளூர், குருக்கத்தி நீலப்பாடி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளின் எடையை சரி பார்த்த கலெக்டர் பட்டியல் எழுத்தர், உதவியாளர் ,சுமை தூக்குவோர் ஆகியோரிடம் 17 சதவீதம் ஈரப்பதத்திற்குள், சரியான எடையில், விவசாயிகளிடம் கையூட்டு பெறாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.தொடர்ந்து கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது அதனை கீழ்வேளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை பார்வையிட்டார். பின்னர் கீழ்வேளூர் அரசு மருத்துவ மனையில நடைபெற்ற பெண் சிசு கொலை தங்க மகள் பாதுகாப்பு திட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேரூராட்சி உறுப்பினர் ரமேஷ்குமார் இரவு நேரத்தில் பெண் டாக்டர் நியமன செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பின்னர் குருக்கத்தி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்சியில் கலந்து கொண்டார். அதன் பின் இரவு பைக்கில் மருத்துவமனை சென்று ஆய்வு மேற்கொண்டார்அதன் பின் கீழ்வேளூர் காவல் நிலையம் சென்று ஆய்வு மேற்கொண்டு பின்னர் கீழ்வேளூர் துணை மின் நிலையத்தை ஆய்வு மேற்கொண்டார். இன்று காலை பேரூராட்சி அலுவலகம் சென்று அங்கு தரை மட்ட நீர் தேக்க தொட்டி மற்றும் நீரேற்றும் அறையை திறந்து வைத்தார். டெல்லியில் நடைபெற்ற விழாவில் தூய்மை இந்தியா திட்டத்தில் தென்னிந்தியாவின் தூய்மை நகராக தேர்ந்து எடுக்கப்பட்ட கீழ்வேளூர் பேரூராட்சிக்கு கிடைத்த விருதுக்கு உழைத்திட்ட பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். அதை தொடர்ந்து கீழ்வேளூர் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள குப்பை தரம் பிரித்து அதில் இருந்து இயற்கை உரம் தயாரித்தல் பணியை பார்வையிட்டார்.பின்னர் கீழ்வேளூர் சிவாஜி நகரில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவை பார்வையிட்டார்.அதைத் தொடர்ந்து கஸ்தூரி நகரில்குப்பைகளை சேகரிக்கப்படும் பாலித்தீன் கவர் மற்றும் குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்களை கொண்டு ஜீரோ பட்ஜெட்டில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய விதைகளை விதைத்து தொடங்கி வைத்தார். பின்னர் கீழ்வேளூர் சீனிவாசபுரத்தில் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று சாலையை பார்வையிட்டார் அதைத் தொடர்ந்து ஆசாத் நகர் சென்று ஆசாத் நகர் தொடக்கப்பள்ளி ஆய்வு செய்து காலை உணவு திட்டத்தில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்டு பார்த்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, மகளிர் திட்ட இயக்குனர் முருகேசன். வட்டாட்சியர் ரமேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் குகன் பேரூராட்சித் தலைவர் இந்திரா காந்தி சேகர், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் மன்றசந்திரசேகர் உறுப்பினர்கள் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story