சென்னை மெட்ரோ பணிகளால் 2 நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை மெட்ரோ பணிகளால் 2 நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

பைல் படம் 

சென்னை மெட்ரோ பணி காரணமாக 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை குடி நீர் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறு வனம் சார்பில் மவுன்ட் பூந்தமல்லி சாலையில் (போரூர் சந்திப்பு) குடி நீர் பிரதான குழாய் மாற்றி அமைக் கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால் நேற்று இரவு 9 மணி முதல் 27-ம் தேதி இரவு 9 மணி வரை 2 நாட்களுக்கு அம் பத்தூர், அண்ணா நகர், தேனாம் பேட்டை, கோடம்பாக்கம், வளசர வாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

அதன்படி, அம்பத்தூர் மண்டலத்தில் அத்திப்பட்டு, பாடி, பார்க் ரோடு, டி.எஸ்.கிருஷ்ணா நகர், முகப்பேர் மேற்கு, முகப்பேர் கிழக்கு பகுதி கள், அண்ணா நகர் மண்டலத்தில் அரும்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு பகுதிகள், தேனாம் பேட்டை மண்டலத்தில் திருவல்லிக் கேணி, ராயப்பேட்டை,ஐஸ்ஹவுஸ், மயிலாப்பூர் பகுதிகள், கோடம்பாக் கம் மண்டலத்தில் கோயம்பேடு, விருகம்பாக்கம், சாலிகிராமம், வட பழனி பகுதிகள், வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலத்தில் அனைத்து பகுதிகள், அடையார் மண்டலத்தில் ராஜா அண்ணாமலைபுரம், அடை யாறு, வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத் துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். அவசரத் தேவை களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன் படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடி நீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம் போல் சீரான முறையில் மேற் கொள்ளப்படும். மேலும், கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story