மண்டைக்காடு பேரூராட்சி அலுவலகத்தில் 2 நாள் உள்ளிருப்பு போராட்டம்

மண்டைக்காடு பேரூராட்சி அலுவலகத்தில் 2 நாள் உள்ளிருப்பு போராட்டம் - பேச்சுவார்த்தைக்கு பின் வாபஸ்
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட சேரமங்கலம் பகுதியில் தனியார் மரஅறுவை ஆலை அமைக்க முயற்சி நடந்து வருகிறது. இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மண்டைக்காடு பேரூராட்சி மன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி மற்றும் ஜனவரி 19ஆம் தேதி நடந்த கூட்டங்களில் மர ஆலைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தீர்மானத்தை மீறி அனுமதி அளித்த பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி, துணைத்தலைவர் சுஜி மற்றும் கவுன்சிலர்கள் நேற்று முன்தினம் மாலையில் பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவிலும் போராட்டம் நீடித்தது. நேற்று இரண்டாவது நாளாகவும் போராட்டம் தொடங்கியது. இதையடுத்து மனவளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் முடிவு ஏற்படவில்லை. இதை அடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ் ஆகியோர் சென்று மீண்டும் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து மர ஆலைக்கு அனுமதி அளிக்க இயலாது என்று செயல் அலுவலர் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார். இதை அடுத்து உள்ளிருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

Tags

Next Story