+2 தேர்வு : எஸ்.எஸ்.வி., மேல்நிலைப் பள்ளியில் 98 சதவீத தேர்ச்சி

+2 தேர்வு :  எஸ்.எஸ்.வி., மேல்நிலைப் பள்ளியில் 98 சதவீத தேர்ச்சி

பைல் படம் 

சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி., மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 98 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி., மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 85 மாணவர்களில் 83 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 98 சதவீதத்தை எட்டியுள்ளனர். பள்ளி மாணவர்கள் ஜானகிராமன், பார்த்தசாரதி தலா 572, செங்குட்டுவன் 564, மாணவி பாரதி 556 மதிப்பெண்கள் பெற்று முதல் 3 சிறப்பிடங்களை பிடித்துள்ளனர். ஜானகிராமன், சிந்துமதி, சந்துரு, பாலமுருகன் ஆகிய 4 பேர் கணினி அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மாணவி பாரதி கணினி பயன்பாடு பாடத்தில் 100க்கு 100 எடுத்துள்ளார். 550 மதிப்பெண்ணுக்கு மேல் 4 பேர், 500க்கு மேல் 14 பேர், 450க்கு மேல் 22 பேர், 400க்கு மேல் 16 பேர் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் திருவேங்கடம், ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் அன்புமணி, இந்திரா, சாந்தி, விஜயா, அருள்மோகன், தமிழரசி, தட்சணாமூர்த்தி மற்றும் மனோகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story