+2 தேர்வு : கோவை மாவட்டத்தில் 96.97% பேர் தேர்ச்சி
பைல் படம்
கோவை: +2 பொதுத்தேர்வு கடந்த 1.03.24 முதல் 22.03.24 வரை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து மாணவர்கள் 3.52,165 மாணவிகள் 4.08,440 பேரும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 7,60,606 தேர்வு எழுதினர்.இதில் 7,19,196 தேர்ச்சி பெற்றனர். மாணவியர்கள் 3,93,890 பேரும் மாணவர்கள் ,3,25,305 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்ச்சி பெற்று 96.97% என உள்ளது.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது
.இதில் ஏதேனெ ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 26,352.மேலும் 5603 மாற்று திறனாளிகள் 5603 தேர்வு எழுதிய நிலையில் 5161 வெற்றி பெற்றுள்ளனர். சிறைவாசிகள் 125 பேர் தேர்வு எழுதிய நிலையில் 115 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதல் இடத்தையும் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தையும்,அரியலூர் மாவட்டம் மூன்றாம் இடத்தியும் கோவை மாவட்டம் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளது. இதில் கோவையில் அரசு உதவி பெறும் பிரசண்ட்டேஷன் பள்ளி மாணவி ஏஞ்சல் ஹன்னா மாவட்ட அளவில் 588 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.அவருக்கு பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.