+2 தேர்வு முடிவுகள் : சிவகங்கை மாவட்டத்திற்கு 2வது இடம்
பைல் படம்
பிளஸ் 2 தேர்வில் 97.42 சதவீத தேர்ச்சி விகிதத்தோடு சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வை 70 அரசுப் பள்ளிகள், 23 அரசு உதவி பெறும் பள்ளிகள், 53 மெட்ரிக் பள்ளிகள் உள்பட 163 பள்ளிகளை சோ்ந்த 6,707 மாணவா்கள், 8,218 மாணவிகள் உள்பட மொத்தம் 14, 925 போ் எழுதினா். இதில் 6,469 மாணவா்கள், 8, 071 மாணவிகள் உள்பட மொத்தம் 14, 540 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 97.42 ஆகும். இந்த மாவட்டம், தோ்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 70 அரசுப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளைச் சோ்ந்த 5,653 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இதில், 5,402 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 95.56 ஆகும்.
Next Story