+2 தேர்வு : பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 86% தேர்ச்சி

12ஆம் பொதுவகுப்பு தேர்வில் பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 86 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12- வகுப்பு தேர்வில் 113 பேர் தேர்வு எழுதியதில் 97 பேர் தேர்ச்சி பெற்று 86 சதவீதம் பெற்று சாதனை படைத்துள்ளனர். கண்ணன் 530 முதலிடம், சூர்யா 519 இரண்டாம் இடம், வேல்முருகன் 479 மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன் உதவி தலைமை ஆசிரியர் லோகநாதன் பெற்றோர் சங்கத் தலைவர் துரை பள்ளி மேலாண்மை குழுதலைவி முத்துலெட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story