2 மணி நேர மின்வெட்டு - மின்சார ரயில் பயணிகள் அவதி
காத்திருக்கும் பயணிகள்
கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கும் சுமார் 40 முதல் 50 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சில சமயம் கூடுதல் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் காலை 10.30 மணி சுமார் இரண்டு மணி நேரங்களை கடந்தும் மின் இணைப்பு இல்லாததால், ரயில் பயணிகள் ரயிலில் பயணிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு தொடர்ந்து மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் மின் வினியோகம் இல்லாததால் டிக்கெட் வழங்கப்படாமல் ரயில் பயணிகள் ரயிலில் செல்லாத நிலை ஏற்பட்டது இதனால் கடும் வெயிலிலும் ரயில் பயணிகள் டிக்கெட் கவுண்டரில் காத்திருந்தனர். அதேபோல் முன் பதிவு செய்ய வந்தவர்களும் முன்பதிவு செய்ய முடியாமல் வரிசையில் காத்திருந்தனர்.
கும்மிடிப்பூண்டி மின்வாரிய அதிகாரிகள் அலட்சிய போக்கை கையாள்வதால் நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை கும்மிடிப்பூண்டி முழுவதுமே கடும் வெயில் நேரத்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் ரயில் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.