தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் 2 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் ....

தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில்  2 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் ....
சாத்தூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் ....
சாத்தூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் 2 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சாத்தூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் சுமார் ரூபாய் 50,000 மேல் ரொக்கப் பணமோ அல்லது பரிசு பொருட்களோ கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அதிகப்படியான மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்லும் போது அதற்குண்டான உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்ட நிலையில் நடத்தை விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்து சாத்தூர் சட்டமன்றத் தொகுதி துணை தேர்தல் அதிகாரி வட்டாட்சியர் தலைமையில் பல்வேறு தேர்தல் பறக்கும் படை அமைத்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதன் அடிப்படையில் வெம்பக்கோட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி தலைமையிலான தேர்தல் பறக்கும் படை குழுவினர் சாத்தூர் அருகில் உள்ள ராமலிங்கபுரம் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தில் இருந்த பையில் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில் அதைக் கொண்டு வந்தவர் ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் மகன் கோபாலகிருஷ்ணன் வயது 28 என்பது தெரிய வந்தது. இவர் வெளியூர்களிலிருந்து வெள்ளி கட்டிகளை வாங்கி நகை ஆசாரிகளிடம் கொடுத்து நகைகளாக உருமாற்றி அதனை கிராமங்களில்வித்து தவணை முறையில் வசூல் செய்து வருபவர் என்பது தெரியவந்தது. எனினும் அவர் கொண்டு வந்த வெள்ளி பொருட்களுக்கு உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் பெட்டிகளில் இருந்த வெள்ளிப் பொருட்களை பையுடன் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் சாத்தூர் தாலுகா அலுவலகத்தில் கொண்டு வந்து ஒப்படைத்தனர்.

அங்கு அதில் இருந்த வெள்ளி பொருட்கள் தரம் மற்றும் எடை குறித்து சோதனை செய்த போது அதில் இருந்த வெள்ளி பொருட்கள் 54 - மோதிரங்கள், 159 செட் மெட்டிகள், 26 செட் வெள்ளி கொலுகள் ஆகியவை சுமார் 2020 கிராம் இருந்தது அதனை சாத்தூர் வட்டாட்சியர் லோகநாதனிடம் ஒப்படைத்தனர். பின்னர் வெள்ளி பொருட்கள் அனைத்தையும் பத்திரமாக சீல் வைக்கப்பட்டு சாத்தூர் சார்நிலை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

Tags

Next Story