இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதி; முதல்வர் ஸ்டாலின்!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கட்டுமான பணியின் போது உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூ. 2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி பாப்ஸா லைன் பகுதியில் இன்று எதிர்பாராத விதமாக நடந்த மண் சரிவில் இரண்டு வட மாநில கூலித் தொழிலாளர்கள் சிக்கினர். அதில் ரிஸ்வான் என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஜாகிர் என்பவர் மீட்கப்பட்டு ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ‌. 2 லட்சம், காயமடைந்த ஜாகிருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவிவை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இறந்தவரின் பூத உடலை ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு கொண்டு செல்லும் அனைத்து செலவையும் நாடாளுமன்ற உறுப்பினர் ராசா ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story