ஏடிஎம்மில் பணம் மோசடி: 2 பேர் கைது

ஏடிஎம்மில் பணம் மோசடி: 2 பேர் கைது

ஏடிஎம் மோசடி

காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கீழச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் கடந்த மாதம் 7ம் தேதி அறந்தாங்கி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு ஏடிஎம்மில் பணம் எடுத்தார். அப்போது அவரை 2பேர் கண்காணித்தனர். நாங்கள் பணம் எடுத்து தருகிறோம் என்று கூறி சக்திவேல் வைத்திருந்த கார்டை வாங்கிவிட்டு அவர்கள் வைத்திருந்த பயன்படாத கார்டை கொடுத்தனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள ஏடிஎம்மில் ரூ.48 ஆயிரம் பணம் எடுத்துள்ளனர். அப்போது சக்திவேல் செல்போனுக்கு பணம் எடுத்த செய்தி வந்தது. இதுகுறித்து சக்திவேல் அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் முத்துகுமாரிடம் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் முத்துகுமார் விசா ரணை நடந்தி வந்தார்.அதில், புதுக்கோட்டை சாலையில் இருவர் சந்தேகப்படும்படி நிற்பதாக தகவல் கிடைத்து. அவர்களை பிடித்து விசாரித்தபோது வேலுார் மாவட்டம், கொணவட்டம் முதல்சீர் (38), திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டி அபேல்(32) ஆகிய இருவரும் ஏடிஎம்மில் பணத்தை எடுத்ததை ஒப்புக்கொண்டனர். போலீசார் இவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மேலும் அதிகமான ஏடிஎம் கார்டுகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story