மின்வயரை திருடிய 2 பேர் கைது
தோட்டத்தில் வைத்திருந்த மின் வயரை களவாடிய இளைஞர்கள் இருவர் கைது.
தோட்டத்தில் வைத்திருந்த மின் வயரை களவாடிய இளைஞர்கள் இருவர் கைது. கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா கிழக்கு அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காத்தவராயன் வயது 60. இவர் அப்பகுதியில் விவசாயியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், டிசம்பர் 17ஆம் தேதி மதியம் 2 மணி அளவில், தனது வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் தோட்டத்திற்கு திரும்பியுள்ளார். இந்த இடைப்பட்ட நேரத்தில் அவரது தோட்டத்தில் வைத்திருந்த, 50 மீட்டர் நீளம் கொண்ட மின் வயரை, அதே பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகன் மனோஜ் வயது 20, சுப்பிரமணியன் மகன் முருகன் வயது 29,ஆகிய இருவரும் சேர்ந்து களவாடி விட்டனர். இது குறித்து காத்தவராயன் பாலவிடுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மின் வயரை களவாடிய மனோஜ் மற்றும் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் பாலவிடுதி காவல்துறையினர்.
Next Story