சேலத்தில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
கோப்பு படம்
சேலத்தில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் கொண்டலாம்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த அமானி கொண்டலாம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த நடராஜ் (வயது 38) என்பவர் போலீசாரை செல்போனில் புகைப்படம் எடுத்து உள்ளார். இடையூறு இல்லாமல் ஓரமாக சென்று புகைப்படம் எடுக்குமாறு போலீசார் கூறினர்.
இதையடுத்து நேற்று போலீசார் போலீஸ் நிலையத்திற்கு நடராஜ், அவரது நண்பர் அர்ஜுனன் ஆகியோர் வந்து போலீசாரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்த நடராஜ், அர்ஜுனன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story