குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
மத்திய சிறை
மதுரையில் பொது ஒழுங்கிற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
மதுரை செல்லூர் நேதாஜி தெருவை சேர்ந்த மருதுபாண்டி, ரஞ்சித் குமார் ஆகிய இருவர் மீதும் கொலை வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் இவர்கள் போலீசாரின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளனர். இதற்கிடையே இவர்கள் இரண்டு பேர் பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகமான வகையில் செயல்பட்டதால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அவர்கள் இரண்டு பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்
Next Story