கிணற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு
பைல் படம்
தூத்துக்குடி அருகே வெவ்வேறு இடங்களில் ஆறு மற்றும் கிணற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் மகன் ராமசந்திரன் (30). இவர் பொங்கல் தினத்தன்று தனது நண்பர்களுடன் ஏரல் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஏரல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவம்: நெல்லை மாவட்டம், தச்சநல்லூரைச் சேர்ந்தவர் துளசிராஜான் (63). இவர் நேற்று குடும்பத்துடன் தூத்துக்குடி அருகேயுள்ள புதுப்பச்சேரி கிராமத்திற்கு வந்துள்ளார். அங்குள்ள தோட்டத்தில் உள்ள குளிக்க கிணற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story