தூத்துக்குடியில் சாலைப் பணியாளர் உட்பட 2பேர் தற்கொலை

தூத்துக்குடியில் சாலைப் பணியாளர் உட்பட 2பேர் தற்கொலை

கோப்பு படம் 

தூத்துக்குடியில் வெவ்வேறு சம்பவங்களில் சாலைப் பணியாளா் உட்பட 2பேர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர். 

தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த திரவியம் மகன் மாடசாமி (48). சாலைப் பணியாளரான இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில், அவா் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு சம்பவம் தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சோ்ந்த சூசையா மகன் அந்தோணி பிச்சை (81). இவரை உடனிருந்து கவனித்துக் கொள்ள யாரும் இல்லையாம்.

இதனால், அவா் வீட்டில் கடந்த பிப். 29ம் தேதி தூக்கிட்டுக் கொண்டாராம். அவரை அப்பகுதியினா் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வடபாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story